தமிழகத்தில் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவராக அறியப்பட்ட மிக முக்கியமான ஆளுமை தொ.ப. என்றழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். தொன்மம் தொட்டு நவீனம் வரையிலான பல்வேறு நிகழ்வுகள் / நம்பிக்கைகள் தொடர்பான பண்பாட்டுத்தள ஆய்வுமுடிவுகளாக அவரால் முன்வைக்கப்பட்ட கருதுகோள்கள் மிக முக்கியமானவை. மஞ்சள் மகிமை என்ற இந்நூல், நம்பிக்கைசார்ந்த பண்பாட்டுச் செயல்பாடுகளின் ஆய்வுகளை உள்ளக்கியது.