நான் அளவுக்கு அதிகமாக சிரமம் எடுத்துக்கொண்டு எழுதிய நாவல் பொய்த் தேவு. சுதந்திரம் வருவதற்கு முன் இந்தியாவில் நமது பகுதிகளில், முக்கியமாக தஞ்சை ஜில்லாவில் இருந்த மக்களையும் போக்குகளையும் கவனித்து, அவற்றுடன் வளர்ந்து அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்த முயற்சியாகவே இந்த நாவலைக் கருத முடியும். பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து, அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்கிற இடத்தில், எல்லாவற்றையும் பொசுக்கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக்கூடிய மனோபாவமும் இருக்கும் என்பது நான் கண்டறிந்த உண்மை. பொருள் என்று மட்டுமல்ல. மனிதன் ஏற்றுக்கொள்கிற எல்லா லட்சியங்களையும் இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பதுதான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை.
க.நா.சு.