ஒரு கவிஞர், கற்பனையில் கவியெழுதுவதைத் தாண்டி, அழகியலை வெளிப்படுத்துவதைத் தாண்டி, தான் சார்ந்த சமூகத்தின் அவலம் குறித்தும் சிந்தித்து கவியெழுதும்போது தான் முழுமை பெறுகிறார். அந்த வகையில், கவிஞர் அறம் கிருஷ்ணன் அவர்களின் 'பேசாத வார்த்தைகள்' தொகுப்பு, பிறர் பேசாத, பேசத் தயங்கும் பலவற்றையும் உடைத்துப் பேசுகிறது! இதன்மூலம் தனிக்கவனம் பெறுகிறது! கவிஞருக்கு வாழ்த்துகள்!
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்