படிக்கவும் ரசிக்கவுமான பல கவிதைகளை எழுதியுள்ள கவிஞர் மதுரகவி, வைகை(ய)க் கவியே வணக்கம், பிரிதலும் பிரிதல் நிமித்தமும், பழைய கீழ் மதுரை ஸ்டேஷன் ரோடு, அசுரக் காத்து, குளவிக் கூடு, கொரோனாதேவி, தூத்துக்குடி கொடூரங்கள் என பல சிறப்பான கவிதைகளைச் சமூக நிகழ்வுகளை முன்வைத்தும் மனதில் தங்கி நிற்கும்படி எழுதியுள்ளார்.
கவிஞர் மதுரகவியின் 'புள்ளிக்குள் பிரபஞ்சம்' நூல், கவிஞருக்கான தனித்துவமான அறிமுகத்தைத் தருவதோடு, வருங்காலத்தில் திரைப்படப் பாடலாசிரியராகவும் வலம்வர கைச்சீட்டாகப் பயனளிக்கும் என்கிற நம்பிக்கையோடு என் வாழ்த்துக்களைப் பகிர்கின்றேன்.
கவிஞர். மு.முருகேஷ்