தமிழகத்தில் மிக முக்கியமான பண்பாட்டு
ஆய்வாளர்களில் ஒருவராக அறியப்பட்ட மிக முக்கியமான ஆளுமை தொ.ப. என்றழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். தொன்மம் தொட்டு நவீனம் வரையிலான பல்வேறு நிகழ்வுகள் / நம்பிக்கைகள் தொடர்பான ஆய்வுமுடிவுகளாக பண்பாட்டுத்தள அவரால் முன்வைக்கப்பட்ட கருதுகோள்கள் மிக முக்கியமானவை.
சமய தாய்த் தெய்வங்கள் பற்றிய வரலாற்று ஆய்வுக் குறிப்புகளும், இந்து என்ற சொல்லால் உருவாக்கப்படும் ஆதிக்கம் பற்றியும், நல்லிணக்கம் தொடர்பாகவும், சடங்கியல் தன்மையும் சமூக அதிகாரமும் குறித்தும், பண்பாட்டுக் கலப்பு பற்றியும் எழுதப்பெற்ற கட்டுரைகள் 'தெய்வம் என்பதோர்' என்ற இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.