தமிழகத்தில் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவராக அறியப்பட்ட மிக முக்கியமான பேராசிரியர் ஆளுமை தொ.ப. என்றழைக்கப்பட்ட தொ.பரமசிவன் அவர்கள். தொன்மம் தொட்டு நவீனம் வரையிலான பல்வேறு நிகழ்வுகள் / நம்பிக்கைகள் தொடர்பான பண்பாட்டுத்தள ஆய்வுமுடிவுகளாக அவரால் முன்வைக்கப்பட்ட கருதுகோள்கள் மிக முக்கியமானவை.
தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற இந்நூலில் தெய்வங்கள், சிறுதெய்வ நெறிகள், கள்ளழகர் குறித்த இரண்டு கட்டுரைகள், 'பார்ப்பார்'. அடிதொழுதல், மாற்று மரபுகள், பலராமன் வழிபாடு. உடைமையும் ஒழுக்கமும் போன்ற ஒன்பது கட்டுரைகளுடன். 1939-மதுரைக் கோயில் அரிசன ஆலயப் பிரவேசம் தொடர்பான கட்டுரையும்...