பெயர் தெரியாத இசை கருவியின் ஆழ்ந்த இசையைப் போல எதிர்பாராத நேரத்தில், எதிர்பார்க்காத திருப்பங்களைக் கொண்டு, மனித வாழ்வின் அற்புதங்களை பகிர்ந்து கொள்ளும் ஜீவனுள்ள மீராவின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நவீன மலையாள இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய அதே உக்கிரத்தோடு தமிழிலும்...
பாலசந்திரன் சுள்ளிக்காடு, என்.எஸ். மாதவன், கெஆர். மீரா என்று மொழிகளை கடந்து நவீன தமிழ் இலக்கிய தடாகத்தில் இடையறாத அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறவர்கள், ஷைலஜாவின் விரல்களுக்கு வந்து சேர்ந்தது தான் படைப்பின் தீராத புதிர். ஷைலஜாவின் கவித்துவமிக்க, சுயம்புவான மொழி தரும் வாசிப்பு "அப்படிப்பட்டது, அலாதியானது"