இனிமையை முகத்தில் தாங்கிய நல்லுருவம் கவிஞர் காளியப்பன். கவிஞரை நான் சிறுவனாய் இருக்கும்போதே அறிவேன். எனது தந்தையாரின் கெழுதகை நண்பர்களில் அவரும் ஒருவர்.
- 'சிரிப்புத் தூறலும் சிந்தனைச் சாரனும்" என்று தலைப்பிட்டுள்ளார். சிரிப்பு மழையாக அடித்துப் பெய்வதையும் சிந்தனை மலையாய் உயர்ந்து நிற்பதையும் வாசிப்போர்? உணரலாம்.
பல கதைகளை வெறும் கதைகளாக மட்டும் நான் பார்க்கவில்லை. ஒரு தத்துவ விசாரணைகள். அதற்குள் இருக்கிறது. அவருள்ளே இருப்பதையும் உணர முடிகிறது. கிருஷ்ணதேவராயருக்கு தெனாலிராமன் உணர்த்திய பகுத்தறிவும் உள்ளே? இருக்கிறது.
காந்தியும், பாரதியும், காமராசரும், இராஜாஜியும், வாரியாரும். பட்டுக்கோட்டையும் உள்ளே இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக கவிஞர் காண விரும்பும் உலகத்தை அறிய முடிகிறது.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே! என அறைகூவல் விடுத்த நிலத்தில் சிறியோர் கொற்றமே நடக்கிறது. இதற்கு மீண்டும் நக்கீரர்களும், பூங்குன்றன்களுமான புறநானூற்றுப் புலவர்கள் புறப்பட்டு வர வேண்டும். அப்படி வந்தவர்களில் ஒருவராய் கா.காளியப்பன் காட்சியளிக்கிறார். வாழ்க!
ப.திருமாவேலன்