'சம்மட்டிபுரம்'
1964 அக்டோபர் 15...
வரலாறு என்பது வெறும் தேதிகளின் தொகுப்போ, அரசர்களின் வெற்றி-தோல்விப் பட்டியலோ அல்ல; அது மனித மனங்களின் ஊசலாட்டமும், மக்களின் வாழ்வியல் வெளிப்பாடும் கொண்டது.
அதிகாரத்தின் மையங்களால் ‘கலகக்காரன்’ என்று முத்திரையிடப்பட்ட ஒரு மாவீரன், தன் சொந்த மண்ணின் விடுதலையை இலக்காகக் கொண்டு ஆங்கிலேய ஆதிக்கத்தையும் ஆற்காட்டு நவாப்பின் நயவஞ்சகத்தையும் ஒரே நேரத்தில் எவ்வாறு எதிர்கொண்டான் என்பதை மீள்வாசிப்பு செய்முறையே ‘சம்மட்டிபுரம்’ எனும் இப்புதினம்.
ஆங்கிலேயருக்குப் பேரச்சமாய் திகழ்ந்த மாவீரன் மருதநாயகத்தின் வீரஞ்செறிந்த வாழ்வையும் அவரது போராட்ட வரலாற்றையும் மையமாகக் கொண்ட இப்புதினத்தை அவர் தூக்கிலிடப்பட்ட (அக்டோபர் 15) இன்று வாசகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
மருதநாயகத்தின் உடலை நான்காகத் துண்டித்து நான்கு திசைகளுக்கும் அனுப்பியதன் மூலம் வெள்ளையர்கள் புரட்சியை அழிக்க நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் அறியாமலே அந்த நான்கு திசைகளிலும் வீரத்தின் விதைகளைத் தூவினார்கள் என்ற வரலாற்று நியதியே இந்நாவலின் ஆன்மாவாக ஒலிக்கிறது.
சமகால அரசியல் சூழ்ச்சிகளையும் அதிகாரப் பசிகளையும் வரலாற்றுப் பின்னணியோடு ஒப்பிட்டுப் பார்க்கவும், வீரம், காதல், சூழ்சி, துரோகம், தியாகம் போன்றவற்றுடன் வீழ்த்தப்படும் மாவீரர்களின் அக உலகையும் புரிந்துகொள்ள இப்புதினம் ஒரு நல்ல திறவுகோலாக அமையும்.