Books
0

கிரகங்களைத் துரத்துபவன்

₹47.00
₹50.00
Non-returnable
View Details
Product Details
முத்தத்தில் உண்டோடி உன் முத்தம் என் முத்தம் என்றெழுதினார் பாதசாரி. கொடுத்ததும் பெற்றதுமான முதல் முத்தங்கள் வேறு வேறென காதலின் வலியை எழுதியிருக்கிறார் யுகன்.

பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்ட துயரங்களை -பெயரையும்கூட- மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகங்களை, நடைமுறை வாழ்வின் வெற்றிச் சூத்திரமாக விளங்கும் போலித்தன்மைகளைச் சுய எள்ளலின் வழியே கடந்துபோகத் துடிக்கிறது இந்தக் கவிமனம். இயற்கையின் கருணைமீது நம்பிக்கைகொள்ள ஜோதிட சாஸ்திரத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறது. எள்ளற்சுவையிலிருந்து அதுவும் தப்பவில்லை. அதிமுக்கியமாய், இலக்கிய உலகுக்கான சிறப்பு விதிவிலக்குகளின் அபத்தங்களைச் சாட்டையெடுத்து விளாசுகிறது. நஞ்சேனும் வேம்பேனும் நன்று என்று போலிப் புலவர்களைத் தோலுரித்துக் காட்டும் தமிழின் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சியில் யுகனும் தனது பெயரைப் பதித்துக்கொண்டுவிட்டார்.

இத்தொகுப்பு, உள்ளடக்க நோக்கில் தினசரி வாழ்வின் இயல்பான தருணங்களிலிருந்து கவிதைகளைக் கண்டுணர்கிறது; வெளிப்பாட்டு வடிவத்தில், அலங்காரங்களைத் தவிர்த்து, சொற்சிக்கனத்தின் வழியே கவிதை நிலையை எட்டுகிறது. அடைமழை நாட்களில் கைகளாலேயே அகழ்ந்தெடுத்த ஏழிலைக் கிழங்குகளாய்க் கைகூடிவந்த இயல்பு.

- செல்வ புவியரசன்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.