எர்னெஸ்ட் ஹெமிங்வே 1950, 1951 க்கும் இடைப்பட்ட ஒரு வருடத்தில் கடலும் கிழவனும் நாவலை எழுதினார். இது அவருடைய கடைசிப் படைப்பாகும். அவர் இந்நாவலை அவருடைய கொந்தளிப்பான காலகட்டத்தில் கியூபாவில் இருந்தபோது எழுதினார்.
ஹெமிங்வேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கார்லோஸ் பேக்கர் இந்நாவலைப் பற்றிச் சொல்லும்போது, "ஹெமிங்வேயின் இறுதிப் படைப்பான கடலும் கிழவனும், எளிய சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்தைப் போல, எளிமையான கதைக்குள் ஆழமான அர்த்தத்தைப் பொதிந்து வைத்திருக்கும் ஓர் அழகான,
அற்புதமான நாவல்" என்று குறிப்பிட்டார். இச்சிறிய நாவல் நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
கேசவமணி