இதுவரை இந்த உலகில் எழுதப்பட்ட கதைகளிலேயே மிகச் இசிறந்த கதை இது.. மூவாயிரம் ஆண்டுகளாக, மனிதகுலத்தின் நினைவுகளில் நீங்காத இடம்பிடித்த, உலகின் முதல் மற்றும் தலைசிறந்த நாவல் இதுதான்.
இதைவெறுமனே ஒரு "பழைய காவியம்” என்று ஒதுக்கிவிடமுடியாது. காலத்தின் தூசியைத் தட்டிவிட்டுப் பார்த்தால், இது இன்றைய நவீனத் திரைப்படங்களை விடவும் விறுவிறுப்பான, உணர்ச்சிகரமான ஒரு சாகசக் கதையாக மிளிர்கிறது. மேற்கத்திய இலக்கியத்தின் ஆணிவேராகக் கருதப்படும் ஹோமரின் இந்தப் படைப்பு, மனித மனதின் ஆழங்களையும், விதியின் விசித்திரங்களையும் பேசுகிறது.
ஒடிஸி, கதைகளை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும், மயக்கும் தன்மை கொண்டது. ஆனால், மூல நூலான கிரேக்க மொழியையோ, அல்லது பழமையான ஆங்கிலச் செய்யுள் மொழிபெயர்ப்புகளையோ படிக்கும்போது, இன்றைய வாசகர்களுக்கு ஒருவித அந்நியத் தன்மை ஏற்படக்கூடும். கவிதை நயத்தில் சிக்கி, கதையின் விறுவிறுப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு உண்டு.
ஹோமர் பாவனைகளோ, பகட்டுகளோ இல்லாமல், மிகவும் இயல்பாகப் பேசுகிறார். நாமும் அப்படியே செய்ய வேண்டும். அதைத்தான் இந்தப் புத்தகத்தில் செய்ய முயற்சித்திருக்கிறேன். இதை ஒரு பழமையான இதிகாசமாகப் பார்க்காமல், உங்கள் கைகளில் தவழும் ஒரு விறுவிறுப்பான நவீனப் புதினமாக மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-அகரா