தமிழகத்தில் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களி ல் ஒருவராக அறியப்பட்ட மிக முக்கியமான ஆளுமை தொ.ப. பேராசிரியர் என்றழைக்கப்பட்ட தொ.பரமசிவன் அவர்கள். தொன்மம் தொட்டு நவீனம் வரையிலான பல்வேறு நிகழ்வுகள் /நம்பிக்கைகள் தொடர்பான பண்பாட்டுத்தள ஆய்வு முடிவுகளாக அவரால் முன்வைக்கப்பட்ட கருதுகோள்கள் மிக முக்கியமானவை.
இந்து தேசியம் என்று தலைப்பிடப்பட்ட இந்நூலில் இந்து தேசியம் உட்பட நான் இந்துவல்ல நீங்கள், சங்கரமடம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம் ஒரு சோகக் கதை என ஐந்து கட்டுரைகள் உள்ளன.
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் பண்பாட்டுத் தளத்தில் பரவிய, அரசியல் சூழல் கருதி அவ்வப்போது சிறு வெளியீடுகளாக யாதுமாகி பதிப்பகத்தால் வெளி-யிடப்பட்டன.