தமிழகத்தில் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவராக அறியப்பட்ட மிக முக்கியமான ஆளுமை தொ.ப. என்றழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். தொன்மம் தொட்டு நவீனம் வரையிலான பல்வேறு நிகழ்வுகள் / நம்பிக்கைகள் தொடர்பான பண்பாட்டுத்தள ஆய்வு முடிவுகளாக அவரால் முன்வைக்கப்பட்ட கருதுகோள்கள் மிக முக்கியமானவை.
இதுவே சனநாயகம் என்ற இந்நூலில் சமயமும் வழிபாடும், உறவும் முறையும், ஆளுமைகள், நூல்முகம், பதிப்புரை, ஆய்வுப் பார்வை என்று ஆறு தலைப்புகளின் கீழ் இருபத்தேழு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.