தமிழகத்தில் மிக முக்கியமான பண்பாட்டு
ஆய்வாளர்களில் ஒருவராக அறியப்பட்ட மிக முக்கியமான ஆளுமை தொ.ப. என்றழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். தொன்மம் தொட்டு நவீனம் வரையிலான பல்வேறு நிகழ்வுகள் / நம்பிக்கைகள் தொடர்பான பண்பாட்டுத்தள ஆய்வுமுடிவுகளாக அவரால் முன்வைக்கப்பட்ட கருதுகோள்கள் மிக முக்கியமானவை.
தமிழ், வீடும் வாழ்வும், தைப்பூசம், பல்லாங்குழி, தமிழக பௌத்தம் : எச்சங்கள். பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும், கறுப்பு என ஏழு கட்டுரைகள் "அறியப்படாத தமிழகம்' என்ற தலைப்பிலான நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.