ஸ்ரீ அபிராமிபட்டர் இயற்றியருளிய ஸ்ரீ அபிராமி அந்தாதி எனும் உரையுடன் கூடிய நூல் பல அறிஞர்களால் பல வகையில் வெளியிடப்பட்டுள்ளன. அபிராமி அன்னையின் புகழ் பாடுவதில் எங்கள் பிரசுரத்தின் பங்களிப்பும் வேண்டும் என்ற எண்ணத்தில் விளைந்ததுதான் இந்நூல் வெளியீடு.
சித்தர்களின் பாடல்களில், ஒரு வரிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட அர்த்தங்களைக் காணலாம். ஸ்ரீ அபிராமிப் பட்டரும் சிலகாலம் சித்தரைப் போல வாழ்ந்திருப்பதினால் அவர் இயற்றிய இந்த அந்தாதியிலும் சில பாடல்களில் சித்தர்களின் யுக்தி காணப்படுகின்றது. அதனால் அப்பாடல்களின் உரைகள் மற்ற உரைகளிலிருந்து சிறிதளவு வேறுபட்டிருக்கக்கூடும்.