உலகில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் கொஞ்சப் பேர்தான். நேரம் இல்லாமல் அவதிப்படுகிறவர்களே நிறைய இங்கு இவர்கள் வீட்டைக் கவனிக்க நேரமே இல்லை என்கிறார்கள். திறமை இருக்கிற நீங்கள் ஏன் புதிய முயற்சிகளில் இறங்கக் கூடாது என்றால் எங்கே நேரம் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். ஐந்து நிமிடம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்திருந்தால் இப்படி ஊளைச் சதை போட்டிருக்காதே என்று கேட்டால்... ஐந்து நிமிடத்திற்கு எங்கே போவேன் என்கிறார்கள். உண்மையிலேயே நேரம் என்பது இல்லையா? இல்லை இருக்கிற நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இவர்களால் முடிய வில்லையா? எது எப்படியோ உங்களுக்கு நிறைய நேரம் வேண்டி இருக்கிறது. அதை ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற கூட்டிற்குள் நீங்கள் அடைக்கத் தேவையில்லை. விருப்பம் போல் நேரத்தை நீங்கள் கூட்டிக் கொள்ளலாம். நீங்கள் இழுத்த இழுப்பிற்கு அது வரும். அதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதில்தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. அதற்கான உத்திகளை இப்போது ஒவ்வொன்றாக நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். வாருங்கள். நேரத்தை உருவாக்குவோம். 'ஆமாம் ஆமாம்... இப்படித்தான் வெளிநாடுகளில் செய்கிறார்கள் என்று சொல்லி அதைப் பின்பற்றச் சொல்லப் போகிறீர்கள்... அதுதானே' என்று அவநம்பிக்கையுடன் எங்களைக் கேட்பவராக நீங்கள் இருந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வைக்கப் போகிறது இந்தப் புத்தகம்.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.