ஒரு பெண்ணுக்குப் படிப்பு எதற்கு? உயர்கல்வி எதற்கு? ஆண்கள் செய்யக்கூடிய கெளரவமான வேலைகள் எதற்கு? பதவிகள் எதற்கு? உரிமைகள் எதற்கு? போர்க்களம் எதற்கு? அரியணையும் அதிகாரமும் எதற்கு? மொத்தத்தில், ஒரு பெண்ணுக்குச் சுதந்தரம் எதற்கு? நேற்றைய ஆணாதிக்க உலகம் அப்படித்தான் சிந்தித்தது. தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பதைக்கூட உணராமல் பெண் சமூகமும் வாழ்ந்து வந்தது. அந்த பேரவலச் சூழலில் இருந்து விடுபட ஒளியையும் வழியையும் வாசலையும் வாழ்க்கையையும் தேடி, துணிச்சலுடன் அடியெடுத்து வைத்தவர்கள் மிகச்சிலர். அடிபட்டு, அடக்கப்பட்டு, அவமானப்பட்டு, மிரட்டல்களைத் தாண்டி, தடைகள் உடைத்து, சிலிர்த்தெழுந்து, சிறகுகள் சூடிய அந்தப் பெண்கள், தம் வாழ்வின் இறுதி நொடி வரையும் போராடிக் கொண்டே இருந்தனர். அவர்கள் வகுத்த பாதையிலேயே இன்றைய பெண் சமூகம் மேலேழுந்து வந்திருக்கிறது. கல்வி, பேச்சு, எழுத்து, உடை, உணவு, வேலை, அரசியல், அதிகாரம், பதவி, அங்கீகாரம், சமத்துவம் என்று ஒவ்வொன்றுக்குமே போராடி, வாழ்க்கை முழுக்கப் போராடி, சரித்திரத்திலும் போராடி இடம்பெற்ற பெண் ஆளுமைகள் உலகமெங்கும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப் புத்தகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண் விடுதலைச் சரித்திரத்தில் பூப்பாதையே இருந்ததில்லை
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.