பிள்ளைகள் கேள்வி கேட்டாலே பல பெற்றோர்கள் பதற்றமாகிவிடுவார்கள். அனைத்தையும் அவர்களுக்கு விளக்கிப் புரியவைக்க வேண்டும். ஆனால் பலர் கட்டளையின் மூலம் கீழ்ப்படியவைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு. புரிதலைக் கொடுக்க வேண்டுமே தவிர, கட்டளை போடக்கூடாது. வாழ்க்கையின் நிஜம் அறியுங்கள். எது என் கட்டுப்பாட்டில் இருக்கிறது, எதை என்னால் கட்டுப்படுத்த முடியாது என்ற தெளிவு பெறுங்கள். 'என் கட்டுப்பாட்டில் இருக்கும் எதையும் நிறுத்தவோ, மாற்றவோ, விரைவுபடுத்தவோ என்னால் முடியும். என் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்தை என்னால் எதுவுமே செய்ய முடியாது' என்பதுதான் மிகப்பெரிய உண்மை. * கவனச்சிதறலும் குழப்பமும் நிறைந்ததாக இன்றைய வாழ்க்கைமுறை மாறியிருக்கிறது. கவனச் சிதறலைத் தவிர்த்துவிட்டு, இந்த நிமிடத்தில் எதைச் செய்தாலும், அதில் நூறு சதவிகிதம் முழுமையாகச் செய்தால் மன அழுத்தம் தவிர்க்கலாம். * எந்தப் புத்தாண்டு தினமாக இருந்தாலும் அது நம்மால் உருவாக்கப்பட்டதுதான். மற்றபடி அந்த நாளுக்குத் தனிச் சிறப்பு என்று எதுவும் இல்லை. அப்படியானால், 'புதிது என்று எதுவுமே இல்லையா' என்று கேட்டால். இருக்கிறது. ஒவ்வொரு நாளுமே புதிய நாள்தான்.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.