அசுரகுலத்தின் மகத்தான வாழ்க்கை வளர்ந்து மேலோங்கியதையும், காலப்போக்கில் கவிழ்ந்து மாண்டு மறைந்ததையும், அதில் தங்கள் பங்கு பற்றியும், மற்றவர்கள் செய்தவை பற்றியும் இராவணனும் பத்ரனும் மாறி மாறிச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் முறையில், அசுர குலத்தின் நற்பண்புகளும், வீரமும், திறனும், நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும், ஆவல்களும், பேராசைகளும், மகளிருக்கு ஆடவர்மீதும் ஆடவருக்குப் பெண்கள்மீதும் உள்ள காதல் வெள்ளமும் அசுர குலத்தை எவ்வாறு அழித்தொழித்தன என்பதை நிலைக்களனாகக் கொண்டு, அசுரச் சமுதாயத்தின் மன ஓட்டங்களையும் கட்டற்ற வாழ்க்கையின் இயல்பு நெறிகளையும் நூலாசிரியர் விரிவாகக் காட்டியிருப்பது குறிக்கத்தக்கது. 'அசுரன்' கதை சொல்வதுபோல இதுவரையில் இராவணன் கதை உள்ளபடி சொல்லப்படவில்லை. இதுவரை பொதுவாக அவன் தீயவனாக, அசுரனாகப் புனையப்பட்டிருக்கிறான், அது ஏற்கப்பட்டிருக்கிறது. அதனை உடைத்து அசலான இராவணன் தன் கதையைச் சொல்கிறான். அது பண்டைய காலத்து அரசுமுறை சார்ந்த சமூக, கலை, பண்பாட்டுக் காட்சிகளைக் கொண்ட வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறது.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.