ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதாவதொரு வகையில் மண்ணைக் குறித்த ஞாபகங்கள் மண்டிக் கிடக்கின்றன. நிலம் பற்றிய பெருமிதங்கள், அதன் நிமித்தமான துரோகங்கள் இப்படி இரு கைப்பிடிகள் கொள்ளுமளவும் நிறையக் கதைகளை நாம் சுமந்தலைகிறோம். ஒருவகையில் மண்ணின் சித்திரங்களில் இருந்தே, ஒரு படைப்பாளியின் படைப்பூக்கம் வேர் பிடித்து, வெள்ளைப் பக்கங்களின் வழியாக அவனைக் கூட்டியலைகிறது. மண்ணுக்கும் மனதுக்குமான உரையாடல்களில் காட்சிப்படுத்தப்படும் வாழ்வும், அதன் முழு முச்சூடான விவரணைகளும் இந்நாவலில் நம்மை உள்ளிணைக்கின்றன. வாழ்ந்து கெட்ட அல்லது மீச்சிறுவாழ்வைத் தன் வசம் வைத்திருக்கத் தெரியாத கதையோட்டமும், கதையாடலும் அனேகம் பேருக்குள்ளுமிருக்கும் நினைவுகளின் மண்ணை ஒரு சுற்றுக் கிளறி வைக்கிறது. கவிஞர் நந்தன் கனகராஜ்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.