கணவன்-மனைவி உறவு குறித்து இதுவரை வெளிவந்துள்ளதிலேயே மிகப் பிரபலமான புத்தகம் இப்புத்தகம் இலட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது. ஆண்களும் பெண்களும் தாங்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கிறோம் என்பதையும், தங்கள்' உறவில் முரண்பாடுகள் தலைதூக்காத விதத்தில் தங்களது தேவைகளைத் தங்களுடைய துணைவருக்கு எவ்வாறு எடுத்துரைப்பது என்பதையும், தங்களுக்கிடையே நிலவும் பரஸ்பர அன்னியோன்யத்தை என்றென்றும் திகட்டாத விதத்தில் எவ்வாறு வளர்த்தெடுத்துக் கொண்டே போவது என்பதையும் இந்நூலின் வாயிலாக ஏராளமான தம்பதியர் கற்றறிந்துள்ளனர். இப்புத்தகம் கீழ்க்கண்டவற்றை உங்களுக்கு எடுத்துரைக்கும்: தம்பதியருக்கிடையே அன்பான, நீடித்து நிலைத்திருக்கும் உறவை வளர்த்தெடுப்பது எப்படி தங்கள் துணைவரின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இணக்கமாக நடந்து கொள்வது எப்படி ஆதிக்கம் செலுத்தாமலும் நச்சரிக்காமலும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது எப்படி சாதாரணமாக வெளிபடுத்தத் தயங்குகிற உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்வது எப்படி காரசாரமான விவாதத்தின் விளைவாக வெளிக்கிளம்பும் வலியைத் தவிர்ப்பது எப்படி ஜான் கிரே, சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகிற உறவியல் வல்லுனர். 'ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்' என்ற இப்புத்தகம் 1990களில் வெளிவந்த நூல்களிலேயே மிக அதிகமாக விற்பனையான நூல் என்ற பெருமைக்குரியது. அவரது புத்தகங்கள் 50 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை மொத்தம் 5 கோடிப் பிரதிகள் விற்றுள்ளன.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.