கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி' என்று பழம் பெருமை பேசுவதற்கான தகுதியும் தகைசார்ந்த ஆவணங்களும் நம்முடைய முன்னோர் படைத்த இலக்கியங்கள்தான். சீவகசிந்தாமணியும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் புறநானூறும் ஓலைச்சுவடிகளாக சமஸ்தானங்களிலும் பழைய தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் செல்லரித்துக் கொண்டிருந்த போது, ஊர் ஊராக, தெருத்தெருவாக அலைந்து அவற்றைக் கைப்பற்றி அச்சு வாகனம் ஏற்றியதால்தான், உத்தமதானபுரம் என்ற கிராமத்தில் பிறந்த 'சாமா' தமிழுக்கே தாத்தா ஆனார். இத்தகைய சிறப்பு வாய்ந்த உ.வே.சா. தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை 'ஆனந்த விகடன்' இதழில் 1940ஆம் ஆண்டு ஜனவரி 7 முதல் வாரம்தோறும் எழுத ஆரம்பித்தார். அதை அவர் எழுதி முடிப்ப தற்கு முன்பே 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் மறைந்துவிட்டார். அதுவரை எழுதிய வரலாறே இந்தப் புத்தகம். உ.வே.சா.ஓலைச்சுவடிகளைக் கைப்பற்ற நடந்து நடந்து போயிருக் கிறார். அன்று அவர் கால்தேய நடந்ததால்தான் இன்று பழந்தமிழ் இலக்கியங்கள் நம் கைகளை அலங்கரிக்கின்றன. அந்த மாமேதையைப் படிப்பது அவருக்குச் செலுத்தும் மகத்தான மரியாதை! ப. திருமாவேலன்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.