0
ஸ்ரீ தேவி பாகவதம்
View Details
Product Details
என் மனதைப் பெரிதும் கவர்ந்த புராணம் தேவி பாகவதமாகும். இந்தப் பழமையான புராணத்தில் நெஞ்சை மலர்விக்கும் சுவையான கதைகளும் அறிவைப் புதுப்பிக்கும் ஆத்ம ரகசியங்களும் சித்தத்தைத் தெளிவுறச் செய்யும் சிந்தனைகளும் நிறைந்திருப்பதோடு காலதத்துவம், இயற்கையின் இயக்கம், விண்வெளி விரிவு, செயல் வட்டம், உயிரியல், உடலியல் முதலானவை பற்றி இதில் கூறப்படும் ஆழ்ந்த கருத்துக்களும், நுண் பொருள்களும் நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும் பயன்படக் கூடியனவாகும். இதில் நரக வர்ணனைகளில் சில பகுதிகளும், தண்டனை வகைகளும், ஜாதியாசார விதிகளும், குலதர்மத்தையொட்டிய கட்டுப்பாடுகளும் ஆண் பெண் இயல் சம்பந்தப்பட்ட சில வாசகங்களும் சில சொற்களும் இந்தக் காலத்தில் நம்மில் பலருக்கு ஏற்காதனவாகத் தோன்றலாம். ஆனால் பழம்பெரும் புராணத்தை எடுத்துப் பிரசுரிக்கும் போது சொந்த அபிப்பிராயங்களுக்கு இடமளிக்காமலும், குறைத்தல் திருத்தல் எதுவும் இல்லாமலும் அப்படியே வருங்காலத்தினரின் வரலாற்றுத் தொடர்புகளுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுச் செல்வதே முறைமையும் கடமையும் ஆகும். எனவே குறைத்தல் திருத்தல் எதுவுமின்றி இந்நூலை வெளியிட்டிருக்கிறேன். அரு. ராமநாதன்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.