இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது. மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது. வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு. உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன. அன்றாடம் நீங்கள் மேற்கொள்கின்ற சிறிய தேர்ந்தெடுப்புகள், ஒன்று, உங்களுடைய கனவு வாழ்க்கையை நோக்கி உங்களை நகர்த்தும், அல்லது பேரழிவுக்கு உங்களை இட்டுச் செல்லும், வெற்றியை முடுக்கிவிடுகின்ற அடிப்படைக் கொள்கைகளை இந்நூல் வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான வெற்றியைக் கைவசப்படுத்த விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய, நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய, இறுதியில் மேதமை பெற வேண்டிய விஷயங்களை இந்நூல் தெள்ளத் தெளிவாகத் தொகுத்துரைக்கிறது. இந்நூலிலிருந்து இவற்றை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்: உங்களுடைய இலக்கு அடைவது எப்படி எதுவாக இருந்தாலும் அதை உங்களுடைய முன்னேற்றத்தைத் தடம் புரளச் செய்கின்ற மோசமான பழக்கங்களை விட்டொழிப்பது எப்படி பெரும் திருப்புமுனைகளை அடைவதற்கு இன்றியமையாத சில முக்கிய ஒழுங்குகளை கொள்வது எப்படி உங்களிடம் வளர்த்துக் நீங்கள் செய்ய விரும்பாத, ஆனால் செய்தாக வேண்டியவற்றைச் செய்ய உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்வது எப்படி உத்வேகத்தின் முழுமையான ஆற்றலைக்கைவசப்படுத்துவது எப்படி ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வது குறித்து நீங்கள் தீவிரமாக இருந்தால், கூட்டு வினைவின் ஆற்றலைப் பயன்படுத்தி நீங்கள் விரும்புகின்ற வெற்றியை உருவாக்கிக் கொள்ளுங்கள். இன்றே உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்குங்கள்.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.