0
நெக்சஸ்
View Details
Product Details
கதைகள் நம்மை ஒன்றிணைத்தன. புத்தகங்கள் நம்முடைய கருத்துகளைப் பரப்பின - நம்முடைய கட்டுக்கதைகளையும்கூட. இணையம் வரம்பில்லா அறிவுக்கான உறுதியளித்தது. படிமுறைத் தீர்வு நம்முடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, பிறகு நம்மை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது. செயற்கை நுண்ணறிவு நம்மை என்ன பாடு படுத்தப் போகிறதோ! நாம் இந்த இக்கட்டான கணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது பற்றியும், நாம் பிழைத்திருக்கவும் தழைத்தோங்கவும் மேற்கொண்டாக வேண்டிய அவசரத் தேர்ந்தெடுப்புகள் பற்றியுமான விறுவிறுப்பூட்டும் விவரிப்பே இந்த நெக்சஸ். "வரலாற்றின் நுட்பமான விபரங்களையும், அதன் பிரம்மாண்டமான போக்குகளையும் ஒரு நேர்க்கோட்டில் இணைக்கின்ற தனித்துவமான திறன் ஹராரியிடம் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவின் தாக்கங்களைப் பற்றி நாம் அனைவரும் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த இக்கட்டான நேரத்தில், அதை ஆழமாக அலசுகின்ற இந்த முக்கியமான நூல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது." முஸ்தபா சுலைமான் "இந்நூல் அற்புதமாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும், எழுதப்பட்டுள்ளது. படுவேகமாக பகுத்தறிவுபூர்வமாகவும் மலர்ந்து கொண்டிருக்கின்ற, ஒரே நேரத்தில் கிளர்ச்சியையும் அச்சத்தையும் ஊட்டுகின்ற ஓர் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முன்னோக்கை ஹராரி நமக்கு வழங்குகிறார். அனைவரும் மிக முக்கியமாக, நம்முடைய அரசியல், பெருநிறுவன, மற்றும் கலாச்சாரத் தலைவர்கள்- கட்டாயம் படிக்க வேண்டும் என்று நான் ஒரு புத்தகத்தைப் பரிந்துரைப்பதாக இருந்தால், அது நெக்சஸ்தான்." ஸ்டீபன் ஃபிரை 'ஹராரி நம் தலைமுறையின் குறிப்பிடத்தக்கச் சிந்தனையாளர்களில் ஒருவர். அவர் துணிச்சலானவர், அறிவார்ந்தவர், நம் மனம் கவர்ந்தவர். அவருடைய இந்த 'நெக்சஸ்' புத்தகம், எழுத்தறிவிலிருந்து செயற்கை நுண்ணறிவுவரை அனைத்தையும் முற்றிலும் வித்தியாசமானதொரு கோணத்திலிருந்து அலசுகிறது. அவருடைய பிற அனைத்துப் புத்தகங்களையும்போலவே, இப்புத்தகமும் இந்த உலகத்தைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கிறது." -ரோரி ஸ்டூவர்ட்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.