0
உயிர் பிழை

உயிர் பிழை

₹248.00
₹275.00
Non-returnable
View Details
Product Details
சல்லடைக்கீரை, ஓட்டைக்கத்தரிக்காய், அழுக்குப் பப்பாளி, பூச்சி பட்ட கொய்யா என ஒதுக்கியவை எல்லாம் இந்த விஷவித்துக்கள் படாதவை அல்லது தொடாதவை. பளபள என பாலிஷ் போட்டு, போஷாக்காய் PROBABLE / POSSIBLE விஷங்களைத் தொட்டுத்தான் விளைந்திருக்கும். ஒக்கலில் உள்ள குழந்தைக்கு, அரைக்கீரையைக் கடைந்து குழைவாக சாதத்தில் மசியப் பிசைந்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பீன்ஸ் பொரியலைத் தொட்டு தொட்டு, நிலா காட்டி, ராஜா கதை சொல்லி சாப்பிட வைக்கும் தாய்க்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அந்தக் குழந்தை சீக்கிரம் ஓடி விளையாடும்; படித்து உலகை ஆளும்; பாதுகாப்பாய் தன்னையும், இம்மண்ணையும் அரவணைக்கும் என்பதுதான். அத்தனையையும் கேள்விக்குறியாக்குகின்றது குழந்தையின் வாயில் ஒட்டி உலர்ந்திருக்கும் பச்சை நிறம். பச்சைக்குள் PROBABLE / POSSIBLE என்ற பட்டியல் ஒளிந்திருக்கும் சாத்தியங்கள் அதிகம் இங்கே. எப்போது துவங்கியது இந்த சிக்கல்? கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகளாக, மனிதன் தன் உடலைச் செதுக்கி வந்தது காய்கறிக் கூட்டத்தை வைத்துதான். இனக்குழுக்களாய் வேட்டைச்சமூகமாய் திரிந்த காலம் தொட்டு இன்றுவரை, காய்கறிகள்தாம் அவன் அன்றாட வாழ்வுக்கு பெருவாரியாக புரதமும் உயிர்சத்துக்களும் கொடுத்து வருகின்றன. 'கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணாவும் இல்லை' [புறநானூறு: 335) என்ற மாங்குடிக்கிழாரின் சங்க இலக்கியப் பாடலை வைத்துப் பார்க்கும்போது, வரகும் தினையும் கொள்ளும் அவரையும் என இந்த நான்கும்தான், நம் பிரதான உணவாக இருந்தது தெரிகின்றது; அவை வளர இந்த நச்சுக்கொல்லிகளின் நயவஞ்சகம் தேவையிருக்கவில்லை. ஆனால், இன்றைக்கு நூற்றுக்கணக்கான காயும் தானியமும் இருந்தும் நலவாழ்வு மட்டும் நசுங்கிக்கொண்டே போகின்றது.....
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.