இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலமாக உங்கள் தன்னம்பிக்கை உயரும் என்றெல்லாம் உறுதி தருவதற்கில்லை தன்னம்பிக்கை நம்முள் இருந்துதான் பிறக்கிறது என்பதை நானும் தீவிரமாக நம்புகிறேன். தன்னை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்தப் புத்தகம் சில முன்னுதாரணங்களைச் சொல்லக் கூடும். 17சி பஸ் பின்னாடியே போங்கள், நீங்க சேர வேண்டிய இடம் வந்துரும் என்று வழிகாட்டுவது ஒரு முறை. இந்தப் புத்தகத்திலும் நிறைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்தப் படைப்பின் நோக்கம். இதில் ஒவ்வொரு பகுதியையும் எனது புரிதலுக்கேற்ப அணுகியிருக்கிறேன். சிலவற்றை அப்படியே கேள்வி பதிலாகக் கொண்டு வந்திருக்கிறேன். சில பகுதிகள் ஒரு பயணக் கட்டுரைகள் போலப் பேசும் இந்தப் புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கமோ, பகுதியோ படிக்கிறவர்களுக்குட் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சி. எழுதியது கோபிநாத்- ஆக இருக்கட்டும். படிக்கிறவர்கள் காந்தியாக இருங்கள். அதுதான் என் வேண்டுகோள். நன்றியுடன், கோபிநாத்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.