10 இனி, 'கடல் புறா'வைப் படிப்பவர்கள் இந்நூலைக் கொண்டு ஒரு கதையைப் படித்து இன்புறுவதோடு, ஆங்காங்கே ஆசிரியர் திறம்படப் புகுத்தியிருக்கும் அரிய கருத்துகளையும் கண்டு பாராட்டுவர் என்பது ஒருதலை. இயற்கைக் காட்சிகளையும், மானிடப் பண்பினையும் ஒவ்வோரிடங்களில் மிகையுமின்றி குறையுமின்றி ஆசிரியர் கையாண்டுள்ள இலக்கிய மரபு போற்றத் தக்கதேயாம்; அன்றியும் அது ஆசிரியரது பரந்த ஆய்வுத் திறனைக் காட்டுகிறது. கருத்து எவ்வளவு கோவைப்பட அமைந் துள்ளதோ அவ்வளவு தெளிவாகவும், ஆற்றொழுக்காகவும் அமைந்துள்ளது ஆசிரியரது தமிழ்நடை. படிக்கப் படிக்கத் தெவிட்டாத சுவைமிக்க நூலாக அமைந்துள்ள கடல் புறாவை யாவருமே படித்தின்புறக்கூடும். என்பது இந் நூலின் முதல் சில பக்கங்களைப் படித்த உடனேயே விளக்கமாகும்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.