தமிழகத்தில் மிக முக்கியமான பண்பாட்டு
ஆய்வாளர்களில் ஒருவராக அறியப்பட்ட மிக முக்கியமான ஆளுமை தொ.ப. என்றழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். தொன்மம் தொட்டு நவீனம் வரையிலான பல்வேறு நிகழ்வுகள் / நம்பிக்கைகள் தொடர்பான பண்பாட்டுத்தள ஆய்வுமுடிவுகளாக அவரால் முன்வைக்கப்பட்ட கருதுகோள்கள் மிக முக்கியமானவை.
சங்கம் தொடங்கி இன்று வரையிலான தொ.ப.வின் சில அரசியல் புரிதல்களையும் உள்ளடக்கியது இந்நூல்
மரபார்ந்த உற்பத்திசார் பண்பாடு தொடர்பானவையும் அதிகாரங்களுக்குப் பலியாகும் பண்பாடு, வாழ்வியல், இறையாண்மை தொடர்பானவையுமான கட்டுரைகளை உள்ளடக்கியது மரபும் புதுமையும் என்ற இந்நூல்.