Books
0
கு.ப.ரா. சிறுகதைகள்

கு.ப.ரா. சிறுகதைகள்

₹495.00
₹550.00
Non-returnable
View Details
Product Details
கு.ப.ரா  தன் கதைகளைப் பற்றி, "என் கதைப்புத்தகத்தை விமரிசனம் செய்தவர்களில் யாரோ ஒருவர் நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம். இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான். நான் கவனித்தவரையில் என் அனுபவத்திலும், வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன."

கு.ப. ராஜகோபாலனின் கதைகளை, அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும், கதை நடத்தும் திறனும், உருவ, கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது.

படித்துப் பார்த்து அனுபவித்து நினைவுபடுத்திக் கொள்பவர்களும் மீண்டும் ஒருதரம் படித்துப் பார்ப்பவர்களும் நம்மிடையே அதிர்ஷ்டசாலிகள் என்று நான் சொல்வேன்.

க.நா.சுப்ரமண்யம்

அவர் படைத்த ஒரு கு.பராவின் கதைகளில் வரும் பெண்கள் எளிமையானவர்கள், பெண்ணாகிலும் ஒலமிட்டு அழுததேயில்லை. மௌனமாகக் கண்ணீர் வடிக்கும் பெண்களைத்தான் எழுதியிருக்கிறார். ஏழ்மை நிறைந்த நடுத்தர வர்க்கத்து மனிதர்களைப் பற்றித்தான் அவரது கதைகள் பேசுகின்றன. கு.பராவின் கதைகள் முழுவதையும் ஆராய்ந்தால் அனேகமாக அவர் பெண்களுக்காக மட்டுமே எழுதினார் என்று எண்ணத் தோன்றுகிறது.

கரிச்சான் குஞ்சு

ராஜகோபாலனைப் போல ஒரு கதை. ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகு கால ஆசை. அது நிறைவேற மறுத்துக்கொண்டே இருக்கிறது.

விமலாதித்த மாமல்லன்

கு.ப.ராவின் கதைகளில்தான் பெண்ணின் அகம் உண்மையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணன்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.