Books
0
உலகை மாற்றிய தாவரங்கள்

உலகை மாற்றிய தாவரங்கள்

₹304.00
₹320.00
Non-returnable
View Details
Product Details
தாவரங்களின் மதிப்புகளையும் (values), பயன்பாடுகளையும் (uses) அளவிடுவது மிகவும் கடினமான செயலாகும். தாவரங்களின் மதிப்புகளை இரண்டு முக்கிய வகைகளாக பிரித்தறியலாம்: உள்ளார்ந்த மதிப்புகள் (inherent values), குறிக்கோள் மதிப்புகள் (instrumental values). மனிதனின் வாழ்கைக்கு அடிப்படையாக அமையும் பொருட் தேவையை ஈடுகட்டுவதற்கு தாவரங்களின் குறிக்கோள் மதிப்புகள் நிச்சயமாக உதவுகின்றன. நான்கு வகை குறிக்கோள் மதிப்புகள் அறியப்பட்டுள்ளன: பொருட்கள் (goods), சேவைகள் (services). தகவல்கள் (information), உள-ஆன்மீக (psychospiritual) மதிப்புகள். உணவு, கால்நடை தீவனம், எரிபொருள், மருந்து, பயனுள்ள வேதிப்பொருட்கள், நார்கள், கட்டைகள், அழகு தாவரங்கள் போன்றவை தாவரங்களால் கொடுக்கப்படும் பொருட்கள் (goods) ஆகும். மகரந்தச் சேர்க்கை, ஒளிச்சேர்க்கை, கனி/விதை பரவல், ஊட்டப் பொருட்களின் சுழற்சி, சாற்றின் தூய்மையைப் பாதுகாத்தல், மண்ணின் தரத்தைப் பாதுகாத்தல், நீர்ச்சுழற்சி, காலநிலை சீராக்கம், சுழல் பேணல், தீங்குயிரிகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற செயல்கள் தாவரங்களால் மேற்கொள்ளப்படும் சேவைகளாகும்.

ஒரு சில தாவரங்களின் மதிப்புகளும் பயன்களும் உலகை மாற்றுவதற்கு முக்கிய காரணங்களாகத் திகழ்ந்துள்ளன என்பதை இந்நூல் விளக்குகிறது.

- முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.